அகண்டச் சீனிவாச மூர்த்தி பிஜேபியில் இணைந்தார்

பெங்களூர் ஏப்.19-
புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார்.கர்நாடக மாநிலத்தில் உள்ள
28 தொகுதிகளிலும்பிஜேபி கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று கூறிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அகண்ட் ஸ்ரீனிவாஸ்மூர்த்தி கட்சியில் இணைந்தது கட்சிக்கு பலத்தை அளித்துள்ளது என்றார்.
டி.ஜே.ஹள்ளி, கே.ஜே.ஹள்ளி கலவரத்தின் போது அகண்ட் சீனிவாசமூர்த்தியின் வீடு தீ வைக்கப்பட்டது, அப்போது அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கவில்லை. நாங்கள் அவருடன் உறுதியாக நின்றோம் என்று எடியூரப்பா நினைவு கூர்ந்தார். அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தி பெரும் ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்தது யானை பலம். அவரை வரவேற்கிறேன் என்றார்.ராம நவமியின் போது பாஜகவில் சேர வாய்ப்பு கிடைத்ததாக அகண்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தி கூறினார். ஸ்ரீராமரின் ஆசியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் கட்சிக்காரனாகவே செயல்படுவேன். மாநிலத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதுடன், மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவேன் என்றார். அதே நேரத்தில் அகண்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் மகன் ரேவந்த் பாஜகவில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், ராஜ்யசபா உறுப்பினர் லெஹர்சிங், முன்னாள் அமைச்சர் சங்கரபதிலா முனேனகோப்பா, மகிளா மோர்ச்சா தலைவர் மஞ்சுளா, ஓபிசி மோர்ச்சா துணை தலைவர் கோவிந்தராஜ், புலிகேசி நகர் மண்டல தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.