அகிலேஷ் நிபந்தனை

புதுடெல்லி, பிப். 20- மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை, 37-வது நாளான நேற்று உத்தரபிரதேச மாநிலம் பாபுகஞ்ச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றனர். இதையடுத்து நேற்று இரவு அமேதியில் யாத்திரை நடைபெற்றது. இன்று ரேபரேலியில் யாத்திரை நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அகிலேஷ், அமேதி அல்லது ரேபரேலியில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்பதாக கூறியிருந்தார்.