அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா விராட் கோலி?

துபாய், நவ. 4- சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோருடன் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதேபோல், மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பெண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் நிடா டாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளரை ஐசிசி விரைவில் அறிவிக்க உள்ளது.