அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான விவரங்கள் வெளியீடு

புதுடெல்லி, ஜூன் 19-
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது. அதில் சேருவதற்கான தகுதி, கல்வித் தகுதி, மருத்துவத் தரநிலைகள், மதிப்பீடு, விடுப்பு, ஊதியம், ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவற்றை விமானப்படை வெளியிட்டுள்ளது. மறுமுனையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஜூன் 24-ம் தேதி இந்த செயல்முறை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.