அக்னிபத் திட்டம் எதிர்த்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, ஜூன். 18 –
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளை ஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பீகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர். புதிய ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காங்கிரஸ் சத்தியாகிரகம் நடத்தவுள்ளது. அதில்காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.