அக்னிபத் போராட்டம் விஸ்வரூபம்

பெங்களூர்: ஜூன். 19 –
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுக்க நடந்துவரும் போராட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார் . பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களுக்கு அரசியல் காழ்புணர்ச்சிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற பார்க்கிறது. அக்னிபத் திட்டம் ஒரு நல்ல திட்டமாகும் . இந்த திட்டம் வாயிலாக சக்தி பொருந்திய இளைஞர்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் காழ்புணர்ச்சிகளுடன் இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தவிர இந்த திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவும் கொடுத்து வருகின்றன. இந்த போராட்டங்களின் போது நடந்துள்ள வன்முறைகளை கண்டித்த முதல்வர், தீ வைப்பது , பொது சொத்து மற்றும் பொருள்களுக்கு சேதம் விளைவிப்பது சரியல்ல. இந்த போராட்டங்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கு கொண்டவை . முன் வரும் நாட்களில் மக்களுக்கு அக்னிபத் திட்டத்தின் நன்மைகள் தெரியவரும். ஏற்கெனவே ராணுவ தேர்வுகள் எழுதியுள்ள சிலருக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தை எதிர்க்கும் நோக்கத்தில் போராட்டங்கள் நடத்தி ரயில்களுக்கு தீ வைப்பது , பொது சொத்துக்களை சேதப்படுத்துவது சரியல்ல. மத்திய அரசு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தகுந்த நேரத்தில் தகுந்த முடிவுகளை எடுக்கும். பள்ளிக்கூட பாட விஷயங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் தவறுகள் இருந்தால் அவற்றை சரிப்படுத்த அரசு தெளிவாக உள்ளது. திருத்தப்பட்ட பாடங்களை தற்போது வெப் சைட்டுகளில் வெளியிட்டு பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டு வருகிறது. ஏதாகிலும் தவறுகள் இருந்தால் திருத்தி கொள்ளப்படும். கன்னட சினிமா சார்லீ படத்திற்கு ஜி எஸ் டி வரிவிலக்கு அளிப்பது குறித்து கூறுவதென்றால் யாரெல்லாம் சலுகைகள் கேட்கிறார்களோ அவற்றை எல்லாம் பரிசீலிக்கிறோம் . ஆனால் சார்லீ திரைப்படத்திர்க்கு வரி சலுகை கோரியுள்ளனர். அது குறித்து பரிசீலனை செய்து முடிவு மேற்கொள்ளுவோம் . இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.