அங்கன்வாடி பெண் பணியாளரின் மூக்கை அறுத்த குற்றவாளி கைது

பெலகாவி : ஜனவரி. 5 – அங்கணவாடி உதவியாளர் பெண் மீது தாக்குதல் நடத்தி அவருடைய மூக்கை அறுத்த விவகாரம் தொடர்பாக காகத்தி போலீசார் கல்லப்பா (44) என்பவனை கைது செய்துள்ளனர். பெலகாவி தாலூகாவின் பசுரத்தே என்ற கிராமத்தில் கடந்த ஜனவரி முதல் தேதியன்று குற்றவாளி தன் வீட்டின் எதிரில் இருந்த செடியில் பூ பறித்ததற்காக அங்கணவாடி உதவியாளர் சுகந்தா என்பவரை வாய்க்கு வந்த படி திட்டியிருப்பதுடன் அவருடைய மூக்கை அறுத்துள்ளான். இதனால் காயமடைந்த சகந்தா அவசர பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார். தவிர அங்கணவாடி சிறுவர்கள் குற்றவாளியின் வீட்டில் உள்ள செடியில் பூ பிரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீடு உரிமையாளன் சுகந்தாவை திட்டி தாக்கியும் உள்ளான். வீடு உரிமையாளன் கல்யாணி மோரே என்பவன் இந்த சம்பவத்தில் குற்றவாளியாவான். இந்த சம்பவத்தில் படு காயமடைந்துள்ள சுகந்தா மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சிறுவர்கள் செய்த தவறுக்கு தேவையில்லாமல் அங்கணவாடி உதவி பெண் தாக்கப்பட்டுள்ளார். ஊமை கணவனை வைத்து கொண்டு அங்கணவாடி தொழில் நடத்தி பிழைப்பு நடத்திவந்த சுகந்தா தற்போது உயிருக்கு போராடிவருகிறார்.இந்த சம்பவம் குறித்து காதகி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி குற்றவாளி கல்யாணி மோரே கைது செய்யப்பட்டுள்ளான்