அஜித் அகர்கர் விளக்கம்

மும்பை: அக். 18-
கிரிக்கெட் வீரர், வர்ணனையாளராக இருப்பதை விடவும் தேர்வுக் குழு தலைவராக இருப்பது கடினமாக இருப்பதாக அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் ஒரு முடிவு வீரர்களின் தலையெழுத்தை மாற்றிவிடும் என்பதால், அனைவரிடமும் சென்று விளக்கம் கொடுப்பது இயலாத விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்திய வீரர்கள் பெர்த் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், ஒரு தேர்வுக் குழு தலைவராக செயல்படுவது எவ்வளவு கடினம் என்றும் பேசி இருக்கிறார். இந்திய தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் வந்த பின், 2 ஐசிசி கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.