அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

பெங்களூரு, டிச. 29: அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுமி உயிரிழந்தார்.
பெங்களூரு வர்தூர் அருகே குஞ்சூரில் வியாழக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்ட வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் இறந்த சிறுமி மான்யா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து வர்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு 8 மணியளவில் சிறுமி நீச்சல் குளத்தில் விழுந்த பந்தொன்றை எடுக்கச் சென்றபோது அங்கிருந்த‌ மின்கம்பியைத் தொட்ட‌தாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வர்தூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று, சிறுமியின் பெற்றோரிடம் புகாரைப் பெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முதலில் சிறுமி கொண்டு வரப்பட்ட வர்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை வட்டாரங்கள், சிறுமி இறந்துவிட்டதாகக் கூறியது. “நாங்கள் ஆரம்ப முயற்சிகளை செய்து பார்த்துவிட்டு, அதன் பிற்கு வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கூறினோன். சிறுமியைக் காப்பாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆத்திரமடைந்த மற்றும் அதிர்ச்சியடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், அங்கு அடிக்கடி மின்சாரம் தாக்கும் சம்பவங்கள் சில காலமாக நடந்து வருவதாகவும், இடத்தைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இவ்வளவு மோசமான சம்பவத்திற்குப் பிறகும், தேவையான பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரித்தேஷ், மே மாதம் நீச்சல் குளத்தின் அருகே உள்ள புட்லைட்டில் எனது குழந்தையை மின்சாரம் தாக்கியது. அப்போது அது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகாரை எழுப்பினேன். அதன் பிறகு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு நானே வந்து ஃபுட் லைட்டில் டேப்பை ஒட்டிக்கொண்டேன். வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என்று நான் கேட்டேன். ஆனால் நிர்வாகத்திடமிருந்து என‌க்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றார்.