அடுத்தாண்டு மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை

புதுடெல்லி டிச.9- மக்களவை தேர்தலை முன்னிட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வெங்காய ஏற்றுமதிக்கு அடுத்தாண்டு மார்ச் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது. அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி விலை கடந்தவியாழக்கிழமை கிலோ ரூ.57.11-ஆக இருந்தது. இது கடந்தாண்டின் இதே காலத்தை ஒப்பிடுகையில் 97.95% அதிகம். அடுத்தாண்டுமக்களவை தேர்தலை முன்னிட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்நடவடிக்கையில் மத்திய அரசுஇறங்கியுள்ளது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் கடந்தவியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளார்.
இந்த தடைநேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்கள், கப்பலில் ஏற்றப்படும் வெங்காயங்கள், சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வெங்காயங்கள் மட்டுமே, ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான கெடு அடுத்தாண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.இது தவிர சர்க்கரை ஆலைகள், கரும்புச் சாற்றை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.