அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெங்களூர்-சென்னை அதி விரைவு சாலை

பெங்களூரு, மார்ச் 12-
சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் பெங்களூரு-சென்னை விரைவு வட்ட சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூரு-சென்னை விரைவுச் சாலைக்கான 285.3 கி.மீ நான்கு வழிச்சாலைத் திட்டம் பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், முக்கிய நகரங்கள் மற்றும் நெரிசலான பகுதிகளைக் கடந்து செல்வதில் தாமதத்தைத் தவிர்க்கவும் உதவும் என்று கூறினார்.கர்நாடகாவில் 71.7 கி.மீ பாரத்மாலா திட்டத்திற்கு ரூ.5,069 கோடி செலவாகும்,” என்றார்.
இந்த சாலை அமைப்பதால் சரக்கு போக்குவரத்து செலவு குறையும்.2024 மார்ச்சுக்குள் 231 கி.மீ. பணிகள் முடிவடையும்
பெங்களூரு-மைசூர் வழித்தடமானது 10 வழிச்சாலை ஆகும்.நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களின் போக்குவரத்திற்காக இருபுறமும் இரண்டு வழிச்சாலை வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு 6 வழிச் சாலை பெங்களூரில் இருந்து மைசூருக்கு நேரடியாகப் பயணிக்க வழிவகை செய்துள்ளது என்றார்.