அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் புதிய கல்விக் கொள்கை ரத்து

பெங்களூரு ஆகஸ்ட் 14-
அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) ரத்து செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து உறுப்பினர்களின் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,
முந்தைய பாஜக அரசு அமல்படுத்திய புதிய கல்விக் கொள்கை அடுத்த கல்வியாண்டு முதல் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றார்.
சில தேவையான தயாரிப்புகளைச் செய்த பிறகு இது ரத்து செய்யப்பட வேண்டும். இந்த வருடம் அதற்கு நேரமில்லை. தேர்தல் முடிவுகள் வந்து ஆட்சி அமைக்கும் நேரத்தில், கல்வியாண்டு தொடங்கிவிட்டது. நடுவில் பிரச்னை வரக்கூடாது என்பதால், இந்த ஆண்டும் அப்படியே தொடர்ந்தது என்றார்.
புதிய கல்விக் கொள்கை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ம ஆசிரியர்களால் ஒரே நேரத்தில் எதிர்க்கப்படுகிறது. எனவே இதை கர்நாடக அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது என்று முதல்வர் சித்தராமைமையா கூறினார்