அணைக்கட்டில் குதித்து தாய் தற்கொலை

பெலகாவி : நவம்பர். 19 –
இரண்டு குழந்தைகளை கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் சவதத்தி போலீஸ் சரகத்தில் உள்ள வட்நாலா அருகில் தீர்த்த அணைக்கட்டில் நடந்துள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த தனுஜா கோடி (32) சுதீப் (4) மற்றும் ராதிகா (3) ஆகியோர் உயிரிழந்தவர்கள் . நவிலு தீர்த்த அணைக்கட்டில் இரண்டு குழந்தைகளை வீசி எறிந்துள்ள தாய் பின்னர் தானும் நீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். முதலில் இரண்டு குழந்தைகளை நீரில் வீசி எறிந்த பின்னர் தனுஜா தானும் அதே அணைக்கட்டு நீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள வெறுப்பே இந்த கொலைகள் மற்றும் தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த உடல்களை வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நவதத்தி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.