அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

பெங்களூர் : ஏப். 12:
நெலமங்களா தாலுக்காவின் ஜோகிபாலியாவில், மனைவியை கொடுமைப்படுத்தியதற்காக அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. படுகாயங்களுடன் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுநாத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளா தம்பி நவீன், சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவானார். நவீனின் மனைவி தினமணி அங்கன்வாடி ஊழியர். வேலைக்கு செல்லும் போது அண்ணன் மஞ்சுநாத், நவீன் மனைவி தினமணியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன், அண்ணன் மஞ்சுநாத்தை கத்தியால் குத்தினார். நெலமங்களா ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.