அண்ணாமலைக்கு அறிவுரை

சென்னை: அக். 3-
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று சந்தித்தார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அண்ணாமலை அளித்த விளக்கங்களை, அமித் ஷாவிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாஜக மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக தற்போது விலகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (அக்.3) ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார்.
திடீர் டெல்லி பயணம்: இந்நிலையில், கோவையில் நடை பயணத்தில் இருந்த அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார்.