அண்ணாமலை பின்னடைவு

கோவை: ஜூன்4-
கோவை மக்களைவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது . கோவை மக்களவைத் தொகுதிக்கான எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடிகல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களாக திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் , பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் , நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தொடர்ந்து முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 9371 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் 5127,பாஜக வின் அண்ணாமலை 1852 வாக்குகள்,அதிமுகவின் ராமச்சந்திரன் 1541 வாக்குகள் பெற்றுள்ளனர்.