அண்ணா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை, செப். 15- தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன் உள்ள உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.