அண்ணி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு மைத்துனன் தப்பி ஓட்டம்

ஹாவேரி, நவ.4-
குடும்பத் தகராறு காரணமாக அண்ணி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று மைத்துனன் தப்பி ஓடிய சம்பவத்தால் காவேரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுக்கா யல்லூர் கிராமத்தில் குமார் கவுடா என்பவர் அவரது அண்ணனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைத்துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.
கீதா (35), அவர்களது இரு குழந்தைகள் அகுல் (10), அங்கிதா (8) ஆகியோர் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் குமார் கவுடா தலைமறைவாகி விட்டார் குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் அந்த வீட்டில் இருந்த தடையங்களை சேகரித்து வருகின்றனர் ஆகிவிட்டது குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது குற்றவாளியை பிடிக்க தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.