அதானியின் சொத்து மதிப்பு 7 நாளில் 10 பில்லியன் டாலர் உயர்வு

புதுடெல்லி: டிச. 6: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடி அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.: கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இரண்டாவது வாரமாக இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. குறிப்பாக, அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1,348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து.

ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி எண்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2,805-க்கும் வர்த்தகமாகின.

இவ்வாறு ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.