அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

வாஷிங்டன்
அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தனர். மேலும், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்’
. இந்த தாக்குதலின் நினைவாக நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது கணவருடன் அஞ்சலி செலுத்தினார்.