அதிமுகவினர் சாலை மறியல்

சென்னை: ஏப். 20: சென்னை, எம்.கே.பி. நகரில் உள்ள150-வது வாக்குச் சாவடியில் ஜெயக்குமார் என்ற அதிமுக நிர்வாகி, தான் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்ததாகவும், ஆனால் அது தாமரை சின்னத்துக்கு சென்றதாகவும் கூறினார்.
இதையடுத்து, அவரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுகவினர்வாக்குச்சாவடியில் முற்றுகையில் ஈடுபட்டனர். தேர்தலை உடனடியாக நிறுத்திவிட்டு வாக்குப் பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் கூறியது புரளி என தெரியவந்தது. மேலும்,அதிகாரிகள் ஜெயக்குமாரை வாக்குச்சாவடி மையத்துக்குள் அமரவைத்தனர். அவரை உடனடியாகவிடுவிக்க வேண்டும் என அதிமுகவினரும், அவரது குடும்பத்தின ரும், வாக்குச்சாவடி முகவர் களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸார்பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.