அதிமுகவில் அமைப்பு செயலாளர்கள் நியமனம்

சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு சமீபத்தில் கூடி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக பிரிந்து நிற்பதால் அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக கழக துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக தலைமை கிளைச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் அதிமுக அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

https://www.dailythanthi.com/News/State/appointment-of-organizational-secretaries-in-aiadmk-edappadi-palaniswami-announcement-745100