அதிமுகவில் ஒற்றை தலைமை

சென்னை, ஜூன், 23- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடியது.கூட்டம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.திருமணமண்டபத்தில் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள்! பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள். ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் துரோகி என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம்
தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டு கொண்டனர். அ.தி.மு.க. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார்! பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்! அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர்; அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்.அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி கூறினார்.
அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன், கழக செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:- இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை.அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற தீர்மானத்துடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என ஆவேசமாக கூறினார். பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை வாசிக்கிறேன் என தொடங்கிய சி.வி.சண்முகம், இரட்டைத்தலைமையால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு என குற்றம்சாட்டினார். இரட்டை தலைமையால் சங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இரட்டைத்தலைமையால் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆவேசப்பட்டார். இது கட்சித்தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தொண்டர்களுக்கு இதனால் சோர்வு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று வலிமையான, தெளிவான ஒற்றைத்தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அவர் பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு! அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உரையாற்றும்போது ஓ.பன்னீர் செல்வம் பெயரை குறிப்பிடவில்லை. அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் பேச முயன்றபோது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம்; அதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது அ.தி.மு.க. பொதுக்குழு இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.