அதிமுகவுடன் கூட்டணியா? – பாமக விளக்கம்

சென்னை:ஜன. 31
அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் பா.ம.க. , தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் பாமக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பா.ம.க., தே.மு.தி.க. உடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கபட்டது. பா.ம.க. , தே.மு.தி.க. கூட்டணியை உறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.இதனை அடுத்து, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு பாமக மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என பாமக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் பாமக தரப்பில் தெரிவிக்கபட்டது.