அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம்

சென்னை: ஜூலை 9: அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2026-ல் ஒன்றுபட்டஅதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்என்று சசிகலா அண்மையில்செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், கட்சியை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரவும்,தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை, பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சசிகலா தனதுசுற்றுப்பயணத்தை வரும் 16-ம்தேதி தென்காசியில் தொடங்கஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்டபொறுப்பாளர் பூசத்துரை மேற்கொண்டு வருகிறார். காவல்துறை அனுமதி கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இம்மாவட்டத்தில் அவர் 21-ம்தேதி வரை சட்டப்பேரவை தொகுதிவாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.