அதிமுகவை காப்பாற்றியது பிஜேபி – எடப்பாடி

சென்னை: செப். 16 –
அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.
அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா.
சிறந்த நுண்​ணறி​வு, எழுத்​து, மொழிப் புலமை, மேடைப் பேச்​சு, அரசியல் நாகரி​கம், தொண்​டர்​களை ஈர்க்​கும் அன்​பு, போராட்ட குணம், பகுத்​தறிவு சிந்​தனை, ஆளு​மைத்​திறன், தலை​மைப் பண்​பு,எளிமை​யான வாழ்வு என அனைத்​தி​லும் அன்​னாந்து பார்க்​க வைக்கக் கூடிய​வர்​தான் அண்​ணா. ஏழை​யின் சிரிப்​பில் இறைவனை காண்​போம் என்​றார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கனவு​களை நனவாக்க ஏராள​மான திட்​டங்​கள் எம்​ஜிஆர் கொண்​டு​வந்​தார்.
2011 முதல் 2021 வரையி​லான அதி​முக ஆட்​சி, பொற்​கால ஆட்​சி. இதில் 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் 1 மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட கொண்​டு​வர​வில்​லை. திமுக ஆட்​சி​யில் மக்​களுக்கும், காவலர்​
களுக்​கும் பாது​காப்பு இல்​லை. இந்த ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. 6 காவலர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏழைகளின் வறுமையை பயன்​படுத்தி சிறுநீரகத்தை திருடு​கின்​றனர்.