அதிமுக சார்பில் போட்டி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, ஜனவரி. 21 –
அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். எங்களிடமும் கூட்டணிக் கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன்.இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.