அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். Live Updates 19 ஜூன் 2022 10:58 AM தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆறாவது நாளில் ஒற்றை தலைமை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒ.பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது ஒ.பன்னிர் செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம் பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி சுந்தரமூர்த்தி ஆகியோர் வருகை தந்துள்ளனர். அங்கு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே தேனி மாவட்டப்பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.