அதிமுக பாமக கூட்டணி பேச்சு வார்த்தை

சென்னை: பிப். 6- மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, பாஜ கூட்டணி முறிந்த பிறகு அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் யாருடனும் சேராமல் உள்ளனர். பாஜ மற்றும் அதிமுக முன்னணி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே அதிமுக – பாஜக – பாமக கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் 12 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா இடத்தையும் பாமக கேட்டுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய பாஜக முன்வந்ததாக கூறப்படுகிறது. பாஜக ஒதுக்கும் தொகுதிகளை பாமக ஏற்க முன்வராததால் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.