அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: நவம்பர். 21 – அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.அதிமுக சார்பில் வாக்குச்சாவடி அளவிலான குழுக்களில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துமாறு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். அப்பணிகளை காண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, களப்பணி மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.