அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஒரு முன்னாள் எம்பி பிஜேபியில் இணைந்தனர்

டெல்லி, பிப். 8: மத்திய இணை அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட‌ 14 பேர் பாஜகவில் இணைந்தனர்.மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில், அரசியல் கட்சியினர், மாற்றுக் கட்சிகளில் இணையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.இந்நிலையில், அதிமுக, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அதிமுக, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட‌ 14 பேர் பாஜகவில் இணைந்த‌னர்.
ஆர்.துரைசாமி, கு.வடிவேல், கந்தசாமி, கோமதி சீனிவாசன், ஆர்.சின்னசாமி, எம்.வி.ரத்தினம் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். நிகழ்வில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட‌னர்.