அதிமுக 49ம் ஆண்டு விழா:கொடி ஏற்றினார் எடப்பாடி

சேலம், அக். 17-
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
தாயார் மறைவால் சொந்த ஊரில் உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.
சேலம் சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு, கட்சி கொடியேற்றினார்.