அதிவிரைவு சாலையில் அபாயகரமான வளைவு: விசாரணைக்கு உத்தரவு

பெங்களூர் : ஆகஸ்ட் . 10 – மாநில போக்குவரத்து கழகமான கே எஸ் ஆர் டி சி பஸ்கள் பெங்களூர் – மைசூர் அதிவேக நெடுஞசாலையில் ஒரு வழி போக்குவரத்துக்கு எதிராக எதிர் திசையில் செல்வது மற்றும் அபாயகரமான வளைவில் பேருந்துகளை திருப்புவது ஆகியவை பற்றி தீவிரமாக எடுத்துள்ள போக்குவரத்து கழகம் இது குறித்து ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது. நெடுஞசாலையில் சுங்க சாவடியை தப்பிக்க கே எஸ் ஆர் டி சி பேரூந்துகள் பாதையை மாற்றி நியமங்களை புறக்கணித்து சென்று வருகின்றன. இது குறித்து போக்குவரத்து கழகத்துக்கு பல புகார் வந்துள்ளன. இது குறித்து தற்போது கே எஸ் ஆர் டி சி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. ஆனாலும் இப்போதும் ஓட்டுனர்கள் தவறான வகையில் வாகனங்களை செலுத்திவருகிறார்கள். இப்படி தவறாக வாகனம் ஓட்டுபர்கள் குறித்து பல விடியோக்கள் பதிவாகியுள்ளன. தவிர இந்த விடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இது குறித்து தீவிரமாக கருதும் கே எஸ் ஆர் டி சி தற்போது இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சில விடீயோக்களை பார்த்திருப்பதாகவும் போக்குவரத்து நியமங்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் தன்னுடைய ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போக்குவரத்து கழகத்தில் பாக்கி உள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்தி உள்ளதாகவும் ஆனாலும் பல ஓட்டுனர்கள் இந்த நெடுஞசாலையில் போக்குவரத்து நியமங்களை மீறி வருகின்றனர். கடந்த மார்ச் முதல் இது போன்ற விதிமீறல்கலால் விபத்தில் ஒருவர் இறந்தும் போயுள்ளார். சமீபத்தில் பிடதி அருகில் கே எஸ் ஆர் டிசி பஸ் ஒன்று மிகவும் அஜாக்ரதையுடன் யூ திருப்பம் எடுப்பது தெரிய வந்ததுடன் மற்றொரு ஓட்டுனர் சுங்க சாவடி அருகில் ஒரு வழி பாதையில் எதிர் மார்கத்தில் வந்திருப்பதும் பதிவாகியுள்ளது. ஓட்டுனர்கள் சட்ட விதிகளை மீறாதிருக்க நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம். என போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அணு குமார் தெரிவித்துள்ளார்