அதிவிரைவு சாலையில் விபத்துக்கள் அதிகளவில் குறைந்துள்ளது

பெங்களூர் : செப்டம்பர் . 4 – பெங்களூர் – மைசூர் அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ள நெடுஞசாலையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபின்னர் விபத்தில் உயிரிழப்பவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மே மாதத்தில் இந்த சாலையில் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 பேர் என இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 6 பேர் என குறைந்துள்ளது . இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு கூடுதல் போலீஸ் உயரியக்குனர் (ஏ டி ஜி பி ) அலோக் குமார் கூறுகையில் பெங்களூர் – மைசூர் விரைவு நெடுஞசாலையில் நடந்த உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் நாங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டோம். இந்த வகையில் மே மாதத்தில் மட்டுமே இப்பகுதியில் 29, ஜூன் மாதத்தில் 28 , ஜூலையில் 8 மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 6 பேர் என சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பெங்களூர் -மைசூர் அதிவிரைவு நெடுஞசாலியை கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோதி அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். பின்னர் இந்த சாலையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த விபத்துக்களில் பலருமுயிரிழந்தனர். பின்னர் என் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் ஜூன் மாதத்தில் இது குறித்து ஆய்வுகள் நடத்தி விபத்துக்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை மீறுபவர்களுக்கு அபராதங்கள் , மற்றும் இருசக்கர மூன்று சக்கர மற்றும் விவசாய வாகனங்களுக்கு இப்பகுதியில் தடை செய்யப்பட்டது ஆகியவை முக்கிய நடவடிக்கைகளாகும். இந்த சாலையில் தற்போது அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் மற்றும் இதர வாகனங்களுக்கு 80 கிலோ மீட்டர் இருந்தது ஆனால் இதனால் அதிகளவில் விபத்துக்கள் நடந்தது. இதற்க்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு விபத்துக்களை குறைத்த போலீஸ் ஊழியர்களுக்கு ஏன் பாராட்டுகளை தெரிவிக்கிறேன் இவ்வாறு அலோக் குமார் தெரிவித்தார்.