பெங்களூர் அக் 12-
பெங்களூர் அத்திபெலே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர் ஆனேக்கல் தாலுகா, அத்திப்பெலே என்ற இடத்தில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து நடந்தது.இதில் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த போட்டோகிராபர் வெங்கடேஷ் என்பவரும் ஒருவர். இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி அவரும் இன்று உயிரிழந்தார்.
இதனால் சாவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வெங்கடேஷ் ஒரு ‘பாடி பில்டர்’ இவர் போட்டோகிராபர் வேலையை செய்து வந்தார். இவரும் இவரது நண்பர் ஒருவரும் பட்டாசு வாங்குவதற்காக அத்திபெலேயில் உள்ள பட்டாசு கடைக்கு சென்று உள்ளனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய வெங்கடேசுக்கு, முதுகு, முகம், கை, ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சை பலனின்றி என்று அவர் உயிர் இழந்தார்.
இந்த விபத்து குறித்து சிஐடி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.