அத்வானி வீட்டுக்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி

புதுடெல்லி, நவ. 8-
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். இதுபற்றி டுவிட்டரில் சிங் வெளியிட்ட செய்தியில், மதிப்பிற்குரிய அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொண்டார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.