அந்தரங்க வீடியோ விவகாரம் நண்பனை கொன்ற நண்பன் கைது

பெலகாவி, ஆக.19- செல்போனில் உள்ள அந்தரங்க வீடியோ விவகாரத்தில் நண்பனை கொன்ற நண்பன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பெலகாவி ராய்பாக் ஹரூகேரி நகரில் நடந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அக்பர் மற்றும் மகந்தேஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள் வேலை எதுவும் செய்வது இல்லை எருமைகளை திருடி விற்று அதில் கிடைக்கும் பணத்தில் ஊர் சுற்றி வந்துள்ளனர் இந்த நிலையில் மகந்தேஷ் தனது மொபைல் போனில் அவர் இளம் பெண்ணுடன் நெருக்கமாக உள்ள வீடியோவை எடுத்து வைத்து உள்ளார். இந்த நிலையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது மகந்தேஷ் வைத்திருந்த மொபைல் போனை அக்பர் பிடுங்கி சென்றுள்ளார். அந்த போனில் உள்ள அந்தரங்க வீடியோவை அவர் வெளியிட்டு விடுவாரோ அது வேறு யாருக்காவது சென்று விடுமோ என்று பயந்த மகேஷ் அக்பரை படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்