அனாதையான காங்கிரஸ் பிஜேபி கடும் விமர்சனம்

பெங்களூர் : செப்டம்பர். 19 -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திவருவது பாரத் ஜோடோ யாத்திரை அல்ல . பாரத் சோடோ யாத்திரை . என வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் நையாண்டி செய்துள்ளார். விதான சௌதாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அசோக் காங்கிரஸ் கட்சியிலிருந்த மூத்த தலைவர்களெல்லாம் ஒவ்வொருவராகியே கட்சியை விட்டு விலகி வருகின்றனர். நாட்டில் காங்கிரஸ் அவுட் ஆப் ஆர்டர் ஆகியுள்ளது . காங்கிரஸ் தற்போது நடத்தி வரும் யாத்திரை இந்தியாவை ஒன்று சேர்க்கும் யாத்திரை அல்ல . காங்கிரசிலிருந்து தலைவர்கள் வெளியேறும் பாரத் சோடோ யாத்திரை என அசோக் கேலி செய்துள்ளார் . சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பாக கே பி சி சி தலைவர் டி கே சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதற்கு பி ஜே பி காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள அசோக் அமலாக்கத்துறை , சி பி ஐ , வருமான வரித்துறை , ஆகிய இலாக்காக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன . மத்திய அரசு எந்த துறையிலும் தலையிடவில்லை . இத்தகைய செயலில் ஈடும் படாது. என கூறினார். எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்புவதன் வாயிலாக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையைத்தடுத்து நிறுத்த அமலாக்கத்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என டி கே சிவகுமார் கூறியிருப்பது சரியல்ல. யார் அதிக பணம் சம்பாதிக்கின்றார்களோ அவர்கள் மீது அமலாக்கத்துறை கண் வைக்கிறது. சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளுகிறது. அந்த வகையில் விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்க்கு ஏதேதோ சாக்குகளை சொல்லி பி ஜே பி மீது பாய்வது சரியல்ல. டி கே சிவகுமாருக்கு அனுப்பியுள்ள சம்மனுக்கும் பி ஜே பிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. தவறு செய்யவில்லை என்றால் பயம் எதற்கு எனவும் அமைச்சர் அசோக் கேள்வி எழுப்பியுள்ளார்.