அனுமதி பெறாத பேனர் – காங்கிரஸ் தலைவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பெங்களூரு, ஆக.21-
பெங்களூரில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதால் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவருக்கு ரூ 50 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பெங்களூர் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன், சாலையோரம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் முதல்வர்.தேவராஜ அர்ஸ் பிறந்தநாளையொட்டி, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் மாநிலத் தலைவர், மாவட்டத் தலைவர் மற்றும் மாநிலத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களின் உருவப்படம் அடங்கிய பேனர் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டு இருப்பதால் கர்நாடக மாநில காதல் கட்சி தலைவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்