அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் – உள்துறை மந்திரி அமித்ஷா

புதுடெல்லி, ஜன. 14- தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தி‌, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஆரோக்கியத்தை வழங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.