அன்னதானம் செய்யும் 1,000 பேருக்கு ரொக்கப்பரிசுடன் விருது- நித்யானந்தா

புதுடெல்லி:, ஜூலை.20-
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பின் கடந்த 13-ந் தேதி குருபூர்ணிமா அன்று சமூக வலைதளங்களில் மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மகா கைலாசாவில் இருந்து பரமசிவன் நமக்கு நேரடியாக வழங்கும் சத்சங்க உரை. சமாதி பழகுங்கள். இந்த 4 மாதமும் நிர்வகல்ப சமாதி தியான முறையை பழகி மற்றவர்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம். சமாதி பழகுகின்ற செய்முறை பற்றி பல சத்சங்கங்களை ஏற்கனவே அளித்திருக்கிறேன். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கைலாசாவின் அதிகாரப்பூர்வ இளணய தள பக்கத்தில் உள்ளது.
இந்த சாதுர்மாசிய விரதத்தில் 1 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும். எனவே 1 கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்று விக்க வேண்டும். இந்து விரோத தீய சக்திகள் என்னை தாக்கி அழிக்க முயன்றபோது, நான் கைலாசாவை உருவாக்கிவிடவில்லை. ஆனால் அப்போது அதற்கான கனவு கண்டு கொண்டிருந்தேன். லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான். பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.