அன்னாசி பழத்தின் நன்மைகள்


அன்னாசி ஒரு ஆரோக்கியகரமான மற்றும் உஷ்ணம் மிகுந்த பழமாகும். அன்னாசி வெறும் ருசி மட்டுமின்றி பல மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்ற ஒரு பழமாகும். அன்னாசி பழம் ஜீரண சக்திக்கும் மிக பழைய காலங்களில் இருந்தே மருந்தாக பயன் படுத்த பட்டு வருகிறது. அன்னாசியில் உள்ள ஊட்ட சத்துகளும் மிக ஏராளம்.
ஜீரண சக்திக்கு : அன்னாசி ஜீரண கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். இதில் ஏராளமாய் உள்ள ப்ரோமேலேன் என்ற பொருள் ப்ரோடீன் அணுக்களை உடைக்க உதவும். இது சிறிய குடலில் எளிதாக ஜீரணமாக உதவும். எந்த வித அஜீரண கோளாறு இருந்தாலும் அன்னாசி பழம் நிவாரணம் அளிக்கும். ஜீரண சுரப்பிகள் குறைபாடால் அவதிப்படுபவர்களுக்கு அன்னாசி பழம் உண்பது மிகவும் நல்லது. தவிர அன்னாசி பழத்தில் உள்ள நார் அம்சம் மற்றும் நீர் அம்சம் மலச்சிக்கலை உடனே சரிப்படுத்தும். தவிர குடல்களின் உள் தசைகளை வலுவாக்கும்.
கேன்சருக்கு: இதுவரை நடந்த பல ஆராய்ச்சிகளில் அன்னாசியில் உள்ள கலவைகள் கேன்சரை எதிர்த்து போராடும் குணங்கள் கொண்டவை என தெரிய வந்துள்ளது. இது சாமான்யமாக ஆக்ஸிடேடிவ் அழுத்தம் மற்றும் நீண்ட காலமாகவே வயிற்று எரிச்சலுக்கும் நல்ல மருந்தாக கருதப்படுகிறது. இதில் உள்ள ப்ரோமேலேன் அம்சம் கான்செர் கிருமிகள் உற்பத்தியாவதை தடுக்கும். சருமம் ,பித்த குழாய் ,காஸ்ட்ரிக் மற்றும் கோலோன் மற்றும் கேன்சர் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க வல்லது. அன்னாசியில் உள்ள பீட்டா க்யாரோட்டின் என்ற அம்சமும் கேன்சருக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது . தவிர அன்னாசி பழம் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது. அன்னாசி பழம் வைரல் மற்றும் தொற்று தொடர்பாக வரும் நோய்களையும் குணப்படுத்தவல்லது.
எலும்புகளுக்கு: அன்னாசி பழத்தில் கால்சியம் மற்றும் மாங்கனீஸ் மட்டுமின்றி பலவேறு போஷாக்கு அம்சங்கள் உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனாலும் மாங்கனீஸ் அதிகம் உண்டால் அது மூலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறக்க கூடாது.
சருமத்திற்கு: வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிரம்பிய பழங்கள் உண்டால் அல்லது சருமத்தின் மீது பூசினாலும் மிகவும் நல்லது . இது சூரியன் மற்றும் வாயு நச்சால் உண்டாகும் சருமத்தின் பாதிப்புகளை நீக்க வல்லது. ஒட்டு மொத்தமாக சருமத்தின் மெருகை கூட்டுவதற்கும் அன்னாசி பழம் மிகவும் சிறந்தது.
அன்னாசி பழத்தின் அபாயங்கள்: அதிக அன்னாசி பழம் உட்கொண்டால் உதடுகள் , நாக்கு , மற்றும் தவடை உட்பட வாய் எரிச்சல் வரும். இந்த எரிச்சல் சற்று நேரம் வரை இருக்கும். ஆனாலும் சிலவே மணிகளில் தானாகவே குறைந்து விடும். தவிர மருந்துகள் உட்கொள்பவர்கள் அன்னாசி பழத்தை தின்பதற்கு முன் எச்சரிக்கையை இருப்பது நல்லது. நன்றாக பழுக்காத அன்னாசி பழம் அல்லது ஜூஸ் குடிப்பதும் உடலுக்கு பாதிப்புகளை தரும். அன்னாசியை அதிக அளவில் உண்டால் , வாந்தி உணர்வு , வயிற்று வலி , அல்லது மார் எரிச்சல் போன்றவை வர வாய்ப்புண்டு. அதனால் அன்னாசியை அளவுடன் உண்ண வேண்டும்.