அன்ன பாக்கியா திட்டங்கள் தொடர்பாக போட்டாபோட்டி : யாருக்கு லாபம்

பெங்களூர் : மார்ச் .28 – அன்னபாக்யா உட்பட ஐந்து உத்தரவாத திட்டங்களை அறிவித்து கடந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த காங்கிரஸ் கட்சி தற்போது பாராளுமன்ற தேர்தலிலும் அதன் பயனை அனுபவிக்க எதிர்பார்த்து வருகிறது. . மத்திய அரசு இலவசமாக அளித்து வரும் அரிசியின் பயனை தங்களுக்கே சொந்தமானது என பி ஜே பி – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தங்களுக்கிடையே மோதிக்கொண்டுள்ளன. கொடுமையான வறட்சி மற்றும் உணவு தானியங்களின் விலையேற்றத்தால் சங்கடத்திற்கு ஆளான மாநில மக்களுக்கு எதிராக அன்ன பாக்யா அம்பும் பிரயோகிக்கிக்கப்பட உள்ளது. அன்னபாக்கியா திட்டத்திற்கு மாதத்திற்கு கூடுதலாக 2.29 லட்ச டன் அரிசி கொள்முதல் செய்ய உள்ளது. இந்த திட்டத்தின் துவக்கத்தில் மாநிலத்திற்கு அரிசியை கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருந்த இந்திய உணவு தானியங்கள் விநியோக வாரியம் திடீரென தன்னுடைய போக்கிலிருந்து மாறி பின்னர் சத்தீஸ்கர் , தெலுங்கானா , ஆந்திரப்பிரதேசம் , ஆகிய மாநிலங்களிலிருந்து அரிசியை கொள்முதல் செய்து கொள்ள மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.இந்திய உண்வு தானியங்கள் விநியோக வாரியத்தின் கீழ் செயல்படும்
விற்பனை வாரியத்தின் அரிசியின் விலைகேற்ப கிலோ ஒன்றிற்கு 34 ருபாய் என்ற கணக்கில் பயனாளிகளுக்கு அவரவரூடைய வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி வருவதன் வாயிலாக மாநில அரசு புதிய வழிமுறையை கையாண்டு வருகிறது. அன்னபாக்கியா திட்டத்திற்கு இந்திய உணவு தானிய விநியோக வாரியம் அரிசியை கொடுக்காதவகைள் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது என மாநில மாநில அரசு குற்றம் சாட்டிக்கொண்டே வந்துள்ளது. அன்னபாக்யா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசியை தேசிய உணவு தானியங்கள் விநியோக வாரியம் வாயிலாக இலவசமாக விநியோகிப்பது
தாங்களே என்பதை வெளிப்படுத்துவதன் வாயிலாக இந்த பாராளுமன்ற தேர்தலில் அரிசி அம்பு பயன் அடுத்த மத்திய அரசும் பல மாதங்களுக்கு முன்னரே முயற்சிகள் மேற்கொண்டுள்ளது . ரேசன் கடைகளில் உணவு தானியங்கள் விநியோகிப்பின்போது மத்திய அரசு இலவசமாக வழங்குவதாக ரசீதுகளில் அச்சிட்டு வழங்க வேண்டும் எனஉத்தரவையும் மத்திய அரசு விதித்திருந்தது.