அபாய கட்டத்தில் கர்நாடகம்

பெங்களூரு, ஜன. 15 – மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக பெங்களுருவில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவது தொற்றின் அபாய நிலைக்கு கொண்டு செல்வதாக கருதப்படுகிறது. தொற்று பரவிவரும் வேகத்தை கவனிக்கும் போது இது சமூகபரவாகி விட்டதோ என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது . ஜனவரி இறுதிக்குள் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ய்புகள் உள்ளது . இந்த நிலையில் அடுத்த 30 நாட்கள் மிகவும் அபாயகரமானவை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 13 என்ற நிலையில் உள்ளது. தவிர பெங்களுருவில் இதுவே 21 சதவிகிதத்தை தாண்டி இருப்பது மாநிலம் அபாய கட்டத்தை நெருங்கி வருவதை குறிக்கிறது . தொற்று மற்றும் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் பெங்களூருவில்தான் அதிகரித்துள்ளது . தற்போது பெங்களுருவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.09 லட்சமாக இருப்பதுடன் இன்று இந்த எண்ணிக்க்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது . மாநிலத்தில் இதுவரை ஒன்றரை லட்சம் அளவிற்ற்கு தோற்று பதித்திருப்பதுடன் இதுவே ஜனவரி இறுதிக்குள் மூன்று முதல் ஐந்து லட்சத்திற்கு உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது. தற்போதைக்கு பெங்களுருவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது . இதை விடுத்து பெல்லாரி , பெலகாவி , தக்ஷிண கன்னடா , ஹாசன் , கோலார் , மண்டியா , மைசூர் , சிவமொக்க , துமகூரு , உத்தர கன்னடா , உடுப்பி உட்பட பல மாவட்டங்களில் 1000 முதல் 4 ஆயிரம் வரை தொற்று புகார்கள் பதிவாகியுள்ளன. இதுவே இம்மாத இறுதிக்குள் மேலும் அதிகளவில் உயரும் வாய்ப்புகளும் உள்ளன . தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலை இப்படியே தொடர்ந்தால் ஜனவரி இறுதிக்குள்ளாக அதிக அளவை எட்டி இதனால்மருத்துவ வசதிகள் மீது பெரும் குறைபாடுகளை சந்திக்கும் நிலைமையும் உள்ளது. மாநிலத்தில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனாலும் எதிர் வரும் நாட்களில் இதை சமாளிப்பது அரசுகளுக்கும் மிகவும் பிரச்சனையாகும் வாய்ப்புக்குகள் உள்ளன. இந்த தொற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுக்க வார இறுதி ஊர்க்கு அமுல் படுத்தியிருப்பினும் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இரண்டாவது வார இறுதி ஊரடங்கு நேற்று iஇரவு துவங்கியதில் மாநிலத்தில்அத்யாவசிய சேவைகள் நீங்கலாக அனைத்து வர்த்தகர்களும் niruththapatullana.பால் , பழங்கள் , காய்கறிகள் , ஆகியவற்றிற்க்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை. தவிர ரயில் , பஸ்கள் வழக்கம் போல் , ஓடுகின்றன அவசியமான சேவைகளுக்கு செல்வோருக்கு பஸ் வசதியுயும் உள்ளது. தவிர இந்த வார இறுதி ஊரடங்கால்எவ்வித பயனும் இல்லை . மாறாக தோற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேதான் தான் உள்ளகிது எனவே அரசு இது குறித்து மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பதே உத்தமம் என பலரும் கருதுகின்றனர். .