அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: மார்ச் 15: தேனாம்பேட்டை, தி.நகரில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பெயின்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் ஒப்பந்ததாரராக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாய் சுக்கிரன் என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் நரேஷ் உள்ளார். இவர் வெளிநாடுகளில் இருந்து நெடுஞ்சாலைகளில் ஒட்டும் விலை உயர்ந்த ஸ்டிக்கர்களை இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாகவும், அரசில் கட்சிகளுக்கு நிதி வழங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், தொழிலதிபர்கள் பலர் அரசியல் கட்சிகளுக்கு சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து ஒப்பந்ததாரர் மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் நடத்தும் தனியார் கொரியர் நிறுவனம் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 12 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகரில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.