அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட்

மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 81 வயதான அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரது காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது குடும்பத்தார் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனர். முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது