“அமித்ஷா அரசியல் சாணக்கியர்” – உ.பி. முன்னாள் அமைச்சர் புகழாரம்

டெல்லி, மே 29- உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான நரட் ராய், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் வாராணசியில் சந்தித்துப் பேசி உள்ளார்.பின்னர் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நரட் ராய், அமித் ஷாவுடன் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரும் உள்ளார்.இதுகுறித்து நரட் ராய் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. நாட்டின் புகழ்பெற்ற உள் துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் சாணக்கியர்.இந்த இரண்டு பேரின் தீர்மானத்தின்படி, சமூகத்தின் கடைசி வரிசையில் உள்ள ஏழைகளுக்கும் அதிகாரம் அளிக்கும் சிந்தனை மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை நான் வலுப்படுத்துவேன். ஜெய் ஜெய் ஸ்ரீராம்” என பதிவிட்டுள்ளார். இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் 1-ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.