அமித்ஷா நம்பிக்கை

புதுடெல்லி, மே 26-
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்பார் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சியான காங்கிரசால் தற்போதைய எண்ணிக்கையில் கூட வெற்றிபெற முடியாது என்றார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:
“காங்கிரஸிடம் எதிர்மறையான அணுகுமுறை உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மே 28ம் தேதி பிரதமர் திறந்து வைப்பார். ஆனால், ஜனாதிபதியே திறந்து வைக்க வேண்டும் என்று சாக்குப்போக்கு கூறி, காங்கிரஸ் அதை புறக்கணித்து அரசியல் செய்கிறது.
அடுத்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக பெறும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்பார். காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டதால், மக்களவையில் தற்போது உள்ள இடங்களில்கூட அதனால் வெற்றிபெற முடியாது” என்றார்.