
பெங்களூர் : மார்ச். 3 – மத்திய உள்துறை அமைச்சரும் தேர்தல் சாணக்கியருமான அமித் ஷா இன்று நகரின் புறப்பகுதி தேவனஹள்ளிக்கு விஜயம் செய்து பி ஜே பியின் நான்காவது விஜய சங்கல்பா ராதா யாத்திரையை துவங்க உள்ள நிலையில் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் மூன்று மணி முதல் இரவு ஒன்பது மணிவரை போக்கு வரத்து பிரச்சனைகள் ஏற்பட உள்ளன. தேவனஹள்ளி பிரதான சாலை , பெல்லாரி வீதி , ஹெப்பால் சந்திப்பு , மேக்ரி சர்க்கிள் , காவேரி திரையரங்க சந்திப்பு , ரமண மகரிஷி வீதி சந்திப்பு , ராஜபவன் வீதி , இன்பெண்ட்ரி வீதி , கப்பன் வீதி , நிருபதுங்கா வீதி , குயின்ஸ் வீதி , அம்பேத்கார் வீதி , கே ஆர் சர்க்கிள் , போலீஸ் திம்மய்யா சர்க்கிள் , ட்ரினிட்டி சந்திப்பு , பழைய விமான நிலைய வீதி , ஏ எஸ் சி மையம் , மற்றும் எஸ் டி வீதிகளில் போக்குவரத்து பாதிப்புகுள்ளாகும் நிலை உள்ளது. தனி விமானம் வாயிலாக நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் பீதருக்கு வந்த அமித் ஷா இன்று காலை 10.30 மணிக்கு குருநானக் கோயிலுக்கு செல்ல உள்ளார். பின்னர் 11.30 மணிக்கு பீதரிலிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக பசவகல்யாணுக்கு செல்கிறார் மதியம் 12.10 மணியளவில் பசவகல்யாணின் கிரிக்கெட் மைதானத்திலிருந்து அனுபவா மண்டபத்திற்கு செல்கிறார். மதியம் 12. 30 மணிக்கு விஜய சங்கல்ப யாத்திரையை துவக்கி வைக்கிறார். மதியம் 12.40 க்கு அனுபவா மண்டபத்திற்கு செல்லும் அமித் ஷா 12.50 க்கு தேரு மைதானத்திற்கு செல்கிறார். மதியம் 1.15 மணிக்கு பொது கூட்டத்தில் கலந்து உரையாற்றுகிறார். பின்னர் 3 மணிக்கு ஹுமதாபாத்தில் ரோட் ஷோ நடக்க உள்ளது. பின்னர் பீதர் விமானநிலையத்திலிருந்து பெங்களூருக்கு வர உள்ளார். அமித் ஷாவுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை , மத்திய உர அமைச்சர் பகவந்த கூபா , கட்சியின் மாநில தலைவர் நளீன் குமார் கட்டில் , முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா , முன்னாள் துவக்கி முதல்வர் லக்ஷ்மன் சவுதி , கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவாண் , பொது நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோர் பங்கு கொள்ள உள்ளனர்.