அமித் ஷா சொல்வது சரியானதுதான்: பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி

டெல்லி ஆக. 4: அவசர சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றம் செய்வதற்கு முன் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ‘’உங்கள் கூட்டணியில் உள்ளதால், டெல்லியில் நடைபெறும் அனைத்து ஊழல்களையும் ஆதரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். ஏனெனில், கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி தேர்தலில் மெஜாரிட்டியுடன் பிரதமர் மோடி வெற்றி பெறுவார்’’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்து மம்தா பானார்ஜி கூறியதாவது:- எங்களுடைய கூட்டணி புதியது. நாடு முழுவதும் எங்கள் கூட்டணி உள்ளது. உண்மையிலேயே INDIA அரசு தலைநகர் டெல்லியில் கூட்டணி அமைக்கும். டெல்லியில் நம்முடைய பாராளுமன்றம் உள்ளது.
தெரிந்தோ அல்லது தெரியாமலோ சரியான விசயத்தை சொன்னரா என்று எனக்குத் தெரியவில்லை.
நாடு முழுவதும் INDIA கூட்டணி உள்ள நிலையில் பேரழிவு, வகுப்புவாத பதற்றம், வேலையின்மை ஆகியவற்றில் இருந்து நாட்டை காப்பாற்ற, இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா நம்முடைய தாய்நாடு. இந்த INDIA கூட்டணி, நம்முடைய தாய்நாட்டிற்காக. அதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மதிப்பு இல்லை. அவர்கள் பல வருடங்களாக கூட்டம் நடத்தியது இல்லை. முன்னதாக அவர்களுடன் யாரெல்லாம் இருந்தார்களோ? அவர்கள் தற்போது வெளியேறிவிட்டார்கள். பயங்கரவாதத்தை உருவாக்குவதுதான் அவர்களுடைய பாரம்பரியம். அரசியலைப்பை உருவாக்குவது அல்ல. சில நேரங்களில் நான் அவமானப்படுகிறேன். தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். வன்முறையை தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் வன்முறையை தேர்வு செய்து எல்லாவற்றையும் காவியாக்குவார்கள். காவி நிறத்தை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த நாடும் காவி நிறமாக்கப்பட்டால், மற்ற நிறங்கள் எங்கே போவது? நம்முடைய கடவுள், தியாகத்துடன் தொடர்புடைய தெய்வீக நிறம். அவர்கள் துன்புறுத்தலுக்காக அதை பயன்படுத்தினால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்றார்.